நாகப்பட்டினம், ஆக. 12: நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலைய கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது.நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் வேளாங்கண்ணி வழியாக செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தில் நேற்றுமேற்கூரை சிமெண்ட் காரைகள் பெயர்ந்து திடிரென விழுந்தது. வேளாங்கண்ணி வழியாக மற்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நின்றதால் பயணிகள் பஸ்சில் ஏறியதால் அப்பகுதியில் நின்றவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்.
+
Advertisement