வேதாரண்யம், டிச.11: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் வேதாரண்யம் ஒன்றியக்குழு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், 100 நாள் வேலையை அனைத்து ஊராட்சிகளிலும் உடனே துவங்க வலியுறுத்தியும், வீட்டு மனைபட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க வேண்டியும், கனமழையால் பாதிக்கப்பட்டு வேலை இல்லாமல் தவிக்கும் விவசாய தொழிலாளர்கள் மற்றும் பெண்களுக்கு அனைத்து ஊராட்சிகளிலும் உடனே 100 நாள் வேலையை துவங்கிட வேண்டும் என வலியுறுத்தியும், கோவில்இடம் புறம்போக்கு இடங்களில் வீடு கட்டி குடியிருந்து வரும் அனைவருக்கும் குடிமனை, பட்டா வீடு வழங்க வலியுறுத்தியும், அனைத்து ஊராட்சிகளிலும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்கிடவும், மகளிர் உரிமைத் தொகை விடுபடாமல் அனைவருக்கும் வழங்கிட வேண்டும் உள்பட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஒன்றிய தலைவர் லதா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement


