வேதாரண்யம், செப்.2: வேதாரண்யம் ஆறுகாட்டு துறை, மணியன்தீவுஆகிய பகுதிகளில் ரூ.38 லட்சம் செலவில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் புகழேந்தி தலைமை விகித்து கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சித்ரா, சோனியா நகர பணி மேற் பார்வையாளர் குமரன், நகர மன்ற உறுப்பினர் இமயா முருகன், கிராம பஞ்சாயத்து ராஜேந்திரன். பூமி தாசன் உள்ளிட்ட மீனவகிராம பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர். ஆறுகாட்டு துறையில் ரூ.18 லட்சத்திலும், மணியன்தீவில் ரூ.18 லட்சத்திலும் அங்கன் வாடி கட்டிடம் பணி தொடங்கப்பட்டு உள்ளது. விரைவில் இந்த பணி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்படும் என நகர மன்ற தலைவர் புகழேந்தி தெரிவித்தார்.
+
Advertisement