வேதாரண்யம், செப்.2: வேதாரண்யம் தாலுக்கா மருதூர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (60) இவருக்கு சொந்தமான கூரை வீடு எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து முற்றிலும் எரிந்து சேதமானது.தகவல் அறிந்த வாய்மேடு தீபணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் அனைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வேதாரண்யம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் உதயம் முருகையன் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட சிவசுப்பிரமணியம் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கினார். நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் ஐயப்பன், ஊராட்சி மன்ற தலைவர் கைலாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
+
Advertisement