தஞ்சை, செப்.16: உலக பராமரிப்பு வாரத்தை முன்னிட்டு தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் தூய்மை பணியாளர்களின் சிறப்பான பணியை ஊக்குவிக்கும் வகையில் விழா கொண்டாடப்பட்டது. இதில் மருத்துவமனையின் பொது மேலாளர் (பொறுப்பு) செல்வபாண்டி, மக்கள் தொடர்பு அதிகாரி மணிவாசகம், புறநோயாளி பிரிவு மேலாளர் ரமணி வாசகம் கலந்து கொண்டனர். பின்னர் பணியாளர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை தூய்மை பணியாளர்களின் மேலாளர் கமலக்கண்ணன் மற்றும் குழுவினர்கள் செய்திருந்தனர்.