காரைக்கால், செப்.16: ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தென் மாநில அளவில் காரைக்காலில் ரோல்பால் வீரர்கள் மூன்றாம் இடம் பிடித்தவர்களை நாஜிம் எம்எல்ஏ வாழ்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
9- வயதிற்கு உட்பட்டோர் மற்றும் 11- வயதிற்கு உட்பட்டோருக்கான தென் மாநில ரோல்பால் போட்டி கடந்த வாரம் தமிழ்நாடு நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தென் மாநில அளவில் புதுச்சேரி ரோல் பால் வீரர்கள் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. ரோல்பால் வீரர்களை காரைக்கால் தெற்கு தொகுதி எம்எல்ஏ A.M.H.நாஜிம் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.
மேலும் கொல்லம், கேரள மாநிலத்தில் நடைபெற உள்ள ரோல்பால் தென் மாநில போட்டியில் பங்கு பெற உள்ள ஜூனியர் மற்றும் சீனியர் விளையாட்டு வீரர்களை வழி அனுப்பி வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் புதுவை மாநில ரோல் பால் சங்க செயலாளர் முத்துக்குமரன், காரை மாவட்ட ரோல் பால் சங்க செயலாளர் நாகேந்திர மணி மற்றும் ரோல் பால் சங்க நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் பங்கு பெற்றனர்.