காரைக்கால், செப். 15: போலகம் அருகே, நள்ளிரவில் மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு சென்ற வாலிபரை, போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.திரு.பட்டினம் சப் இன்ஸ்பெக்டர் குமரன் (பொ), நேற்று முன்தினம் நள்ளிரவு, காரைக்கால் நாகூர் மெயின் சாலை, திரு.பட்டினம் போலகம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது, போலகம் பிப்டிக் திடல் அருகே, சந்தேகத்துக்கிடமான ஒரு நபர் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு சென்றுள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் அவரை நிறுத்தி விசாரணை செய்த பொழுது, முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதை தொடர்ந்து, போலீசார் அவரை தொடர்ந்து விசாரணை செய்த பொழுது, நாகப்பட்டினம் மாவட்டம், ஓரத்தூர், தெற்குத் தெருவை சேர்ந்த ஆகாஷ் (19) என்பது தெரிய வந்தது. தள்ளி கொண்டு சென்ற மோட்டார் சைக்கிளுக்கான ஆவணங்களை கேட்ட பொழுது, அவர் திருதிருவென முழித்துள்ளார். எந்தவித ஆவணமும் இல்லாததால், மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில், ஆகாசை போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர் .
+
Advertisement