Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

469வது கந்தூரி விழாவை முன்னிட்டு நாகூர் ஆண்டவர் புத்தக வெளியீட்டு விழா

நாகப்பட்டினம், அக்.14: நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் புத்தக வெளியீட்டு விழா நடந்தது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 469 வது கந்தூரி விழா வரும் நவம்பர் மாதம் 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை தொடர்ந்து டிசம்பர் மாதம் 1ம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் விழா நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டி அபுல்பதஹ் கிழக்காசியாவின் பேரொளி என்ற நாகூர் ஆண்டவர் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகத்தை எழுதி இருந்தார். இந்த புத்தக வெளியீட்டு விழா நேற்று நாகூர் ஆண்டவர் தர்கா அலுவலகத்தில் நடந்தது. முதல் பிரதியை தர்கா பரம்பரை டிரஸ்டியும் ஆலோசனை குழு தலைவருமான கலிபாசாஹிப் பெற்றுக் கொண்டார். புத்தக எழுத்தாளர் அபுல் பதஹ் சாகிப்பிற்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டிகள் காஜிஷேக்ஹசன் சாகிப், ஹாஜி செய்யது ஹாஜா மொய்னுதீன் சாஹிப், முஹம்மது பாக்கர் சாகிப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.