நாகப்பட்டினம்,அக்.10: நாகப்பட்டினம் மாவட்டத்தில் எல்கேசி மற்றும் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை வரும் 17ம் தேதி வரை RTE சேர்க்கை நடை பெறுகிறது என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு, பள்ளிக்கல்வித்துறை, தனியார் பள்ளிகள் இயக்ககம் குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நுழைவு நிலை வகுப்பில் நாகப்பட்டினம் மாவட்டத்தில்
எல்கேசி மற்றும் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை கடந்த 6ம் தேதி தொடங்கியது. வரும் 17ம் தேதி வரை சேர்க்கை பெறுகிறது.
எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பயிலும் பள்ளி முதல்வர்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.