வேதாரண்யம், நவ.11: வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளியில் இருந்து திருச்சிக்கு தினமும் ரயில் இயக்க வேண்டும் என ரயில்வே துறைக்கு கோரிக்கை மனு அளிக் கப்பட்டது.வேதாரண்யம் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புசெயற்குழு உறுப்பினர் மோகன் ரயில்வேதுறைக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை, மாலை என 2 முறை ரயில் இயக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை மாலை மட்டும் அகஸ்தியன் பள்ளியில் இருந்து திருச்சி வரை இந்த டெமோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது.
திருச்சிக்கு தினமும் ரயில் இந்த ரயில் சேவையை நீட்டிக்க வேண்டும். அகஸ்தியன்பள்ளியில் இருந்து சென்னைக்கு இரவு நேரத்தில் ரயில் இயக்க வேண்டும். இந்த டெமோ ரெயிலை மயிலாடுதுறை வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். அகஸ்தியன்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பாதையில் செங்காத்தலை பாலம் அமைந்துள்ளது. இங்கு ரயில்வே கிராசிங்கேட் உள்ளது. எனவே அந்த பகுதியில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும். அகஸ்தியம்பள்ளி, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் வரை செல்லும் பயணிகள் ரயிலை விழுப்புரம் வரை நீட்டிக்க வேண்டும். தற்போது ரயில்வே துறையினர் திருவாரூரில் ஆய்வு செய்து திருவாரூரில் இருந்து பகல் நேரத்தில் திருச்சிக்கு தினசரி ரயில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்த தினசரி ரயில் சேவையை அகஸ்தியன் பள்ளி வரை நீட்டித்து தர வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
