நாகப்பட்டினம், நவ. 11: நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 208 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.கூட்டத்தில் டிஆர்ஓ பவணந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணன், தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அரங்கநாதன் மற்றும் பலர்கலந்து கொண்டனர்.
+
Advertisement
