ஏற்காடு, மே 10: ஏற்காடு லாங்கில்பேட்டை கிராமத்தில், முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடப்பது வழக்கம். கடந்த மே 1ம் தேதி பூச்சாட்டுதல் நடந்தது. அதனைத் தொடர்ந்து கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. கம்பம் நடும் விழாவும், பால்குட ஊர்வலம், அலகு குத்துதல், அக்னி கரகம் நடைபெற்றது. நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாலை வாண வேடிக்கையுடன், முத்து மாரியம்மன் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். முக்கிய வீதிகள் வழியாக சுற்றி வந்த தேர், லாங்கில்பேட்டை கோயில் வளாகத்தை வந்தடைந்தது.
+
Advertisement