திருத்துறைப்பூண்டி, ஜூலை 14: திருத்துறைப்பூண்டி நகராட்சியில் செயல்படுத்தப்படும் தார்சாலை பணிகளை நகர்மன்ற தலைவர் ஆய்வு செய்தார். திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 24 வார்டுகளில் சாலை, குடிநீர், குளம் மேம்பாடு, சுகாதாரம் உள்ளிட்ட பணிகள் கடந்த நான்கு ஆண்டு திமுக ஆட்சி 80 சதவீதம் பணி நிறைவேற்றப்பட்டுள்ளது, அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக திருத்துறைப்பூண்டி நகராட்சி 19வது வார்டு சுராஜ் நகரில் மண் சாலையை தார் சாலையாக அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், பொறியாளர் வசந்தன் பார்வையிட்டார். இதில் கவுன்சிலர் கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.