திருத்துறைப்பூண்டி, ஜூலை 10: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் காலை உணவு திட்டம் மூலம் 4 பள்ளிகளில் பயிலும் 73 குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சமையல்கூடத்தின் தூய்மை குறித்து தினந்தோறும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருவது வழக்கம் இதே போன்று நேற்று காலை உணவின் தரம் மற்றும் சமையல் கூடத்தின் தூய்மை குறித்து நகர் மன்ற தலைவர் கவிதாபாண்டியன்பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது நகராட்சி ஆணையர் துர்கா, பொறியாளர் வசந்தன் மற்றும் சுகாதார ஆய்வாளர் மாரிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
+
Advertisement