ஊத்தங்கரை, ஜூலை 10: ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு அருகே உள்ள ஊமையனூர் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி மனைவி மகேஸ்வரி (38). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மகேஸ்வரி, கடந்த 5ம்தேதிஇ ஊத்தங்கரை சென்று வருவதாக கூறி வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும், அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து வீரமணி ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, மாயமான மகேஸ்வரியை தேடி வருகின்றனர்.
+
Advertisement


