Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஊட்டி தற்காலிக மார்க்கெட் கடைகளில் பணம் திருட்டு

ஊட்டி,ஜூன்29: ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதியில் 1200க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன. இந்த கடைகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில், இந்த மார்க்கெட் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு தற்போது புதிதாக கடைகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதனால், மார்க்கெட் பகுதியில் இருந்த கடைகள் படிப்படியாக ஊட்டி ஏடிசி., பகுதியில் உள்ள ரேஸ்கோர்ஸ் பார்க்கிங் தளத்தில் தற்காலிகமாக கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கடைகள் அனைத்தும் தகரங்களை கொண்டு அமைக்கப்பட்டள்ளது.

இந்நிலையில், இங்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லாத நிலையில், தற்போது திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக கூறப்படுகிறது.நேற்று முன்தினம் இரவு இந்த மார்க்கெட் பகுதிகளுக்குள் நுழைந்த சிலர் அங்கிருந்த இரு கடைகளை உடைத்து உள்ளே சென்று பணத்தை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

இறைச்சி கடை ஒன்றில் ரூ.7 ஆயிரம் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து வியாபாரிகள் அளித்த புகாரின் பேரில் ஊட்டி நகர போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து திருட்டு நடக்காமல் இருக்க தற்காலிக மார்க்கெட் கடைகள் உள்ள பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.