Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த பணத்தை ஈடு செய்ய பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது

சின்னமனூர், ஜூன் 22: சின்னமனூரில் பெண்ணிடம் நகை பறித்து, தப்பியோட முயன்ற பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம், சின்னமனூர் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் மங்களதாஸ் மனைவி மனைவி தேன்மொழி (50). இவர் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு நடந்து சென்றார். சின்னமனூர் பி.டி.ஆர் கால்வாய் கிழக்கு பகுதியில் உள்ள அரசு மாணவிகள் விடுதி அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர், தேன்மொழி அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பியோட முயன்றார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தேன்மொழி கூச்சலிட்டார். அவரது சப்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள், வாலிபரை விரட்டி சென்று பிடித்து சின்னமனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கோவை மாவட்டம், உடுமலைப்பேட்டையை சேர்ந்த சத்தியநாராயணன் மகன் ராஜேஷ்கிருஷ்ணன் (28) என்பதும், பட்டதாரியான அவர் உத்தமபாளையம் அருகில் கோம்பையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருப்பதும் தெரியவந்தது. மேலும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால், அதனை ஈடு செய்ய வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிந்தது. புகாரின்பேரில் வழக்குப்பதிந்த போலீசார், ராஜேஷ்கிருஷ்ணனை கைது செய்தனர்.