அவிநாசி,மே23: அவிநாசி அருகே நட்டுக்கொட்டையான் புதூரை சேர்ந்த பழனிசாமி மனைவி பூரணியம்மாள்(60).மளிகை கடை நடத்தி வருகிறார்.கடந்த வாரம் இவரது கடைக்கு வந்த மர்ம நபர் பொருள் வாங்குவது போல நடித்து பூரணியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்து தப்பிச் சென்றார். இதுகுறித்து சேவூர் இன்ஸ்பெக்டர் துரைசாமி வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படை வாகனச் சோதனையின் போது பைக்கில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அவர், சேவூர் பந்தம்பாளையம் பகுதியில் வசித்து வரும்தென்காசி மாவட்டம் கருத்தபிள்ளையூரைச் சேர்ந்த பால்அந்தோணிராஜ்(40) என்பது தெரியவந்தது. அவர் தான் பூரணியம்மாளிடம் நகை பறித்தவர் என்பதும் தெரியவந்தது. அந்தோணிராஜை கைது செய்த போலீசார் 2 பவுன் சங்கிலி மற்று பைக்கை பறிமுதல் செய்தனர்.
கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்