பாலக்காடு, ஜூலை 14: பாலக்காடு மாவட்டம் ஒத்தப்பாலம் அருகே சாலேயோரம் நடந்து சென்ற மூதாட்டியின் கழுத்திலிருந்து தங்க சங்கிலி பறித்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஒத்தப்பாலம் தாலுகா பாலப்புரம் பகுதியை சேர்ந்த ராதா (64), இவர் கடந்த வெள்ளிக்கிழமை பாலப்புரம் சாலையில் கடைக்கு தனியாக நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த மர்மநபர் மூதாட்டியிடம் விலாசம் கேட்பது போல் கேட்டு மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கசங்கிலி பறித்துக்கொண்டு தப்பி சென்றார்.
இது குறித்து மூதாட்டி ஒத்தப்பாலம் காவல்நிலையம் சென்று புகார் மனு அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில், ஒத்தப்பாலம் தாலுகா பாலப்புரம் அருகே கருவாந்தொடியை சேர்ந்த பிரசாத் (40), என தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் ஒத்தப்பாலம் பஸ் நிலையம் அருகே போலீசார் பிரசாத்தை கைது செய்தனர்.