மதுரை, அக். 31: மதுரையை அடுத்த ஒத்தக்கடையிலிருந்து திருவாதவூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை 16 கி.மீ தூரம் கொண்டது. இச்சாலையில் ஒத்தக்கடை, புதுத்தாமரைபட்டி, கே.புதூர், நெடுங்குளம், இலங்கியேந்தல், ஆமூர், பனைக்குளம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இதன்படி மாவட்டத்தின் புறநகர் கிராமங்களை இணைக்கும் இந்த முக்கிய சாலையில் பனைகுளம் சந்திப்பில் உயர் கோபுர மின்விளக்குகள் பொருத்தப்படாமல் உள்ளது. சிட்டம்பட்டி மற்றும் திருவாதவூர் சாலைகளை இணைக்கும் இச்சந்திப்பில் மின்விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட சந்திப்பில் உயர் கோபுர மின்விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
 
  
  
  
   
