அவனியாபுரம், ஆக. 30: மதுரை, அவனியாபுரம் புறவழிச்சாலையில் அமைந்துள்ள எம்ஜிஎம் நகரில் கழிவு நீர் சாலையில் தேங்குவதுடன் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதி மக்கள் சாலையில் நடமாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த பிரச்னை குறித்தும், உரிய நடவடிக்கை எடுகக் வலியுறுத்தியும் இப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து வருகின்றனர்.
இருப்பினும் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. எனவே சுகாதார நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்றி நோய் பரவாமல் தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.