மதுரை, செப். 27: ஆண்டுதோறும் உலக ரேபிஸ் தினம் செப்.28ம் தேதி (நாளை) கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி, தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக மதுரை, தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனையில் நாய் மற்றும் பூனை போன்ற செல்லப் பிராணிகளுக்கான இலவச ரேபிஸ் தடுப்பூசி முகாம் நாளை நடைபெறுகிறது. கால்நடை பராமரிப்புத்துறை மதுரை மண்டல இணை இயக்குநர் டாக்டர் ராம்குமார், துணை இயக்குநர் பாபு தலைமையில், கால்நடை பன்முக மருத்துவமனை பிரதம மருத்துவர் ஜோசப் அய்யாத்துரை இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
இதன்படி நாளை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறும். இம்முகாமில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் செல்லப் பிராணிகளான நாய் மற்றும் பூனைகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். இத்தகவலை கால்நடை பராமிப்புத்துறை மதுரை கோட்ட உதவி இயக்குநர் டாக்டர் ஜான்சுரேஷ் தாசன், திருமங்கலம் கோட்ட உதவி இயக்குநர் டாக்டர் சரவணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.