மதுரை, ஆக. 27: இரண்டு டூவீலர்கள் மோதிய விபத்தில் போலீஸ்காரர் படுகாயமடைந்தார். மதுரை ஆண்டார்கொட்டாரம் அய்யனார் நகரை சேர்ந்தவர் சிலம்பரசு(30). இவர் மதுரை சிறப்பு காவல்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றுகிறார். ஆண்டார்கொட்டாரத்தில் இருந்து கருப்பாயூரணி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கணபதி நகர் வரும் போது இவர் ஓட்டி சென்ற டூவீலர் மீது முத்துப்பாண்டி என்பவர் ஓட்டி வந்த மற்றொரு டூவீலர் மோதியது. இந்த விபத்தில் சிலம்பரசு படுகாயமடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் கருப்பாயூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.