மதுரை, ஆக. 23: மதுரை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை நுண்ணறிவு பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு இணைந்து, நேற்று திருநங்கையருக்கான சமூக விழிப்புணர்வு கூட்டத்தை மதுரை ரயில் நிலையத்தில் நடத்தியது. இதில் யாசகம் கேட்டு ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் வருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
மேலும், அவர்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள ஒன்றிய, மாநில அரசுகளின் மூலமும், அரசு சாரா தன்னார்வ அமைப்புகள் மூலமும் செயல்படுத்தப்படும் சமூக நலத்திட்டங்களை பயன்படுத்தி மாற்று தொழில்கள் மற்றும் வேலைகளுக்கு செல்லலாம் என்றும், இதற்கு விருப்பப்படும் திருநங்கைகளுக்கு ரயில்வே ஒப்பந்த வேலைகளை ஏற்பாடு செய்து கொடுக்க உதவுவதாகவும் கூறப்பட்டது.