திருப்பரங்குன்றம், நவ. 22: திருப்பரங்குன்றம் அருகே தோப்பூரை அடுத்த கோ.புதுப்பட்டி பகுதியில், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க கோரி மாவட்டத்தில் உள்ள 75 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் அவர்களில் 53 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து விண்ணப்பத்துள்ள அனைவருக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கோரி, நேற்று திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென முற்றுகை போராட்டம் நடத்தினர்.
அதனைத்தொடர்ந்து தாசில்தார் கவிதா அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, விடுபட்ட அனைவருக்கும் பட்டா வழங்குவற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


