மதுரை, நவ. 21: மதுரை சர்வேயர் காலனி சக்திநகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் கோட்டைச்சாமி. இவரடது மகன் செல்வலட்சுமணன் (30). இவர் சிற்ப வேலைகள் செய்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பாக, சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் இவர் படித்துக் கொண்டிருந்தபோது, இளம்பெண் ஒருவரை காதலித்துள்ளார். இதுகுறித்து அவரது தாயாரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக செல்வலட்சுமணன் வீட்டில் யாரிடமும் பேசாமலும், வேலைக்கு செல்லாமலும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த திருப்பாலை போலீசார், அவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, விசாரணை நடத்தி வருகின்றனர்.


