மதுரை, ஆக. 21: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மதுரை வருவாய் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப்போட்டிகள் நேற்று துவங்கியது. இதனை பள்ளிக்கல்வித்துறையின் உடற்கல்விப்பிரிவு ஆய்வாளர் வினோத் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
இதையடுத்து மாணவ, மாணவிகளுக்கு 80 மீ., 100 மீ., 110மீ., 400மீ., அளவிலான தடை தாண்டும் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. இது தவிர ஈட்டி மற்றும் வட்டு எறிதல் போட்டிகளும் நடைபெற்றன. இதில் வீரர், வீராங்கனைகள் சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டி இன்று (ஆக.21) மற்றும் நாளையும் தொடர்ந்து நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.