மதுரை, ஆக. 21: மதுரையில் அரசு கல்லூரி ஆசிரியர்கள் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலுயுறுத்தி நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை, செல்லூரில் உள்ள மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகம் முன்பு., தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மதுரை மற்றும் சிவங்கை மண்டலத்தின் சார்பில் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை மண்டல தலைவர் சுல்தான் இப்ராஹிம் தலைமை வகித்தார். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கல்லூரிக் கல்வி இயக்குநகராக மூத்த பேராசிரியரை நியமிக்க வேண்டும். அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் சுமார் 100 முதல்வர் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் விரிவாக பேசினர்.
இதில் மதுரை மற்றும் சிவங்கை மண்டலத்தை சேர்ந்த நிர்வாகிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.