மதுரை, ஆக.20: மதுரை நெல்பேட்டை நாகூர் தோப்பு மீன் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் சபியுல்லாகான்(30). இவர் தன் அண்ணனுடன் சேர்ந்து ஆட்டுமந்தை பொட்டலில் கறிக்கடை நடத்தி வருகிறார். இங்கு 15க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் ஒருவர் முனிச்சாலை ரோடு பிரபாகரன்(43).
இவர் சில நேரங்களில் வீட்டுக்கு செல்லாமல் கடையில் தங்கி இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபாகரன் கடையில் வியாபாரம் செய்து வைத்திருந்த ரூ.14 ஆயிரத்தை அவர் திருடியதாக தெரிகிறது. இது குறித்து சபியுல்லாகான் அளித்த புகாரின் பேரில், விளக்குத்தூண் போலீசார் வழக்கப்பதிந்து பிரபாகரனை கைது செய்தனர்.