மதுரை செப். 18: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய சங்கங்களின் மதுரை புறநகர் மாவட்ட குழுக்கள் சார்பில், மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கருப்பசாமி, மாவட்டச் செயலாளர் தமிழரசன், பொருளாளர் திருதரன், மாநில பொருளாளர் பாரதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வினோத் கண்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் கண்ணன், மாநகர் மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அஜித், மருதுபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதில், மயிலாடுதுறையில் ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் வைரமுத்துவை ஆணவ படுகொலை செய்ததை கண்டித்தும், இதுபோன்ற ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றிட கோரியும், வைரமுத்துவின் மரணத்திற்கு நீதி கேட்டும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.