மதுரை, செப். 17: மயிலாடுதுறையை சேர்ந்த ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி வைரமுத்து, ஆணவ படுகொலை செய்ததை கண்டித்தும், தமிழக அரசு ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றக்கோரி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியார் நிலையம் பகுதியில் மாவட்ட தலைவர் பாவேல் சிந்தன் தலைமையில், இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் டீலன் ஜெஸ்டின் உள்ளிட்டோர் பிரதான சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 30க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.