மதுரை, செப். 17: மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 19ம் தேதி மதுரை கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடக்கிறது. இதில், அரசு முதன்மை செயலரால் (நிதித்துறை) மதுரை கலெக்டர் தலைமையில் நடப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இது சில நிர்வாக காரணங்களால் வரும் 19ம் தேதிக்கு பதிலாக வரும் 24ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement