மதுரை, அக். 16: மதுரை, கோச்சடை பகுதியை சேர்ந்தவர் ஜெயபாண்டி(49). கொத்தனாரான இவரது மகன் சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டார். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த ஜெயபாண்டி வீட்டில் இருந்து வெளியேறி நாகமலை புதுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் கோச்சடை பஸ் ஸ்டாப் முன்பாக நேற்று முகத்தில் காயங்களுடன் மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்தார். இது குறித்து மனைவி சிவகாமி புகாரின் பேரில் எஸ்எஸ்காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
+
Advertisement