மதுரை, அக். 16: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்திலிருந்து கேரளா மாநிலம் கொச்சி வரைசெல்லும் தேசிய நெடுஞ்சாலையின் மதுரை மார்க்கத்தில், ஒன்றிய அரசின் சாலை மேம்பாட்டு நிதியின் கீழ் மதுரையில் உள்ள முடக்குச் சாலை சந்திப்பில் ரூ.53 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இப்பாலத்தின் கீழ் முடக்குச்சாலை சந்திப்பில் இருந்து டிவிஎஸ் பஸ் நிறுத்தம் வரை சுமார் 1 கிமீ தூரத்திற்கு அணுகு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இச்சாலையில் சம்மட்டிபுரம் சந்திப்பில் இரண்டு இடங்களில் சாலை பலத்த சேதமடைந்து கிடக்கிறது. அங்கு, போதிய மின்விளக்குகளும் இல்லாததால் அவ்வழியாக இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலையை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.