மதுரை, செப். 16: மதுரை, சுப்ரமணியபுரம் காளியம்மன்கோயில் தெருவை சேர்ந்த பாருக்சேட் மகன் அஜிஸ்சேட்(27). லோடு மேன். இவர், பழங்காநத்தம் பசும்பொன் நகரை சேர்ந்த பெண்ணுடன் கடந்த 4 ஆண்டுகளாக திருமணமின்றி சேர்ந்து வாழ்ந்தார். இந்நிலையில் அஜிஸ்சேட் வீட்டருகே காவியா என்பவரின் மகள் நேற்று பந்து விளையாடினார்.
அப்போது தூக்கி வீசிய பந்து இரு மின் கம்பிகளுக்கு இடையே சிக்கியது. இதை எடுக்க முயன்ற அஜிஸ்சேட் மீது மின்சாரம் பாய்ந்ததால் தூக்கி வீசப்பட்டார். இதனால் அப்பகுதியில் இருந்தோர் அவரை 108 ஆம்புன்ஸ் உதவியுடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுப்ரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.