மதுரை, செப். 16:தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தை கடந்த 2021 டிச.18ல் துவக்கி வைத்தார். இதன்படி சாலை விபத்துகளில் சிக்குவோர் அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.2 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை பெறலாம். விபத்தில் சிக்கியோரை மருத்துவமனையில் சேர்ப்பவருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.
மாநிலம் முழுவதம் 250 அரசு மருத்துவமனைகள், 473 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 723 மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை அரசு மருத்துவமனையில் மட்டும் 2021ம் ஆண்டு முதல் கடந்த ஆகஸ்ட் வரையிலும் 17,307 பேர் இத்திட்டத்தால் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.