மேலூர், செப். 15: மேலூர் அருகே கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள கருங்காலக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமினை கலெக்டர் பிரவின்குமார், மாநில நலவாழ்வு குழும இயக்குநர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் அருண் தம்புராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
முகாமில் 17 சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு, பொது மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் குமரகுருபரன், கொட்டாம்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் சண்முகப் பெருமாள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.