பேரையூர், ஆக. 15: பேரையூரில் நேற்று கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்ற போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரையூரில் நேற்று கல்லூரி மாணவ, மாணவிகள், போதைப்பொருட்கள் தடுப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இதற்கு பேரையூர் முக்குச்சாலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேரையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமா தலைமை தாங்கினால்.
கல்லூரியின் தாளாளர் பாண்டியராஜன், முதல்வர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். இப்பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்கள், முக்குச்சாலை, உசிலம்பட்டி சாலை, பேரையூர் பேருந்து நிலையம், காவல் நிலையம் வழியாக போதைப் பொருட்கள் தடுப்பது சம்பந்தமான விழிப்புணர்வு பாதாகைகள் ஏந்திச்சென்றனர். இதற்கான பாதுகாப்பு பணிகளை எஸ்ஐ சின்னச்சாமி மற்றும் போலீசார் மேற்கொண்டனர்.