மதுரை, ஆக. 15: மதுரை அண்ணாநகர் எஸ்ஐ தியாகபிரியன் தலைமையில் போலீசார், மானகிரி சாவடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது 6 பேர் கும்பலாக அமர்ந்து பணம் வைத்து சூதாடுவது தெரியவந்தது. போலீசார் சுற்றி வளைத்ததில் அதே பகுதியை சேர்ந்த குணசேகர பாண்டியன் (45), ராஜேந்திரன் (65), பரமசிவன் (48) ஆகியோர் சிக்கினர். அவர்களை கைது செய்த போலீசார் அங்கிருந்து தப்பிச்சென்ற அதே பகுதியைச் சேர்ந்த மலைச்சாமி, செல்லம், அதிவீரபாண்டி ஆகியோரை தேடி வருகின்றனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.4500 பறிமுதல் செய்யப்பட்டது.
+
Advertisement