மதுரை, நவ. 11: அழகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் தற்போதே பனிப்பொழிவு மாலை முதல் காலை வரை அதிகமாக இருக்கிறது. வழக்கமாக கார்த்திகை மாதத்தின் இடைப்பகுதியில் உருவாகும் அடர் பனி தற்போதே வந்திருப்பது ஆச்சர்யம் அளிப்பதாக இருக்கிறது. இதன்படி அழகர்கோவில், பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, மாங்குளம், சின்ன மாங்குளம், சத்திரப்பட்டி, அ.வல்லாளப்பட்டி, மாத்தூர், ஆமத்தூர்பட்டி, கடச்சனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் மாலை மற்றும் காலை நேரங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவு, புகை மூட்டம் போன்று காட்சியளிக்கிறது. இதன் காரணமாக அதிகாலையில் வேலைக்கு செல்பவர்கள் உள்பட அனைத்து வாகன ஓட்டிகளும் முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்கிறார்கள். இந்த பனிப்பொழிவு காரணமாக காலையில் நடைப் பயிற்சிக்கு செல்லும் முதியோர் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.
+
Advertisement

