உசிலம்பட்டி, அக். 11: 50 சதவீத மானியத்தில் தார்ப்பாய் மற்றும் மண்புழு உர படுக்கைகள் வழங்கப்படுவதாக வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவிஹ்துள்ளார்.
செல்லம்பட்டி வட்டார வேளாண்மை விரிவாக்க மைய பகுதிகளுக்கு முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் மண்புழு உர படுக்கைகள் வழங்கப்படுகின்றன. தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் சிறுதானிய திட்டத்தில் தார்பாய்களும் விநியோகிக்கப்படுகிறது. இதற்கு 50 சதவீத மானியம் உண்டு. தேவைப்படும் விவசாயிகள் சிட்டா, ஆதார், வங்கி கணக்கு புத்தக முதல் பக்கம் நகலுடன் செல்லம்பட்டி வட்டார வேளாண்மை அலுவலகத்தில் பதிவு செய்து
கொள்ளலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.