மதுரை, செப். 11: மதுரை, செல்லூர் பாரதிநகரை சேர்ந்தவர் மோகன்(46). இவரது மனைவி தேவி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களின் மூத்த மகன் ஜெகதீஸ்வரன்(19). இவர் பிளஸ் 2 முடித்து விட்டு ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள வெல்டிங் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இளைய மகன் பாண்டீஸ்வரன்(16) 8ம் வகுப்பு வரை படித்துவிட்டு, அப்பகுதியில் உள்ள காளி கோயிலில் பூசாரியுடன் சேர்ந்து வழிபாடுகள் செய்யும் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த பாண்டீஸ்வரன், திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.