மதுரை, அக். 10: மதுரை வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் வண்டியூர் மெயின்ரோடு தாசில்தார்நகர் பகுதியில் இருந்த மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய முடிவெடுத்தார். இந்நிறுவனத்தின் நிர்வாகிகளான ஜீவனா என்ற சாந்தாஜென்சி மற்றும் சீத்தாராமன் ஆகியோரை சந்தித்து, கடந்த 2021 டிசம்பர் மாதம் ரூ.2 லட்சம் முதலீடு செய்தார். ஆனால், அதற்கு அடுத்தநாளில் அந்த நிறுவனம் மூடப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வகுமார், இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் வழக்குப்பதிந்து போலீசார் ஜீவனா (எ) சாந்தா ஜென்சி, சீத்தாராமன் ஆகியோரை தேடிவருகின்றனர்.
+
Advertisement