அவனியாபுரம், அக்.9: மதுரை மாநகராட்சி பகுதியான அவனியாபுரத்தில் உள்ள திருப்பரங்குன்றம் சாலையில் அதிமுகவினர் சார்பில் 1990ம் ஆண்டு எம்ஜிஆர் சிலை நிறுவப்பட்டது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் இந்த சிலையை சேதப்படுத்தினர். இது குறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் இரு தினங்களுக்கு முன் அப்பகுதியில் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகள் அடிப்படையில் எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தியவரை சேதப்படுத்திய அவனியாபுரம் அருணகிரிநாதர் கோயில் தெருவைச் சேர்ந்த ஜவகர் மகன் மணிமாறன் (31) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என, சந்தேகப்படும் போலீசார், அதுகுறித்து மணிமாறனிடம் விசாரித்து வருகின்றனர்
+
Advertisement