திருமங்கலம், நவ. 7: திருமங்கலம் அருகே முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தலைமையில், கட்சி நிர்வாகிகளுடனான கூட்டம் நடைபெற்றது. மதுரை மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம், நேற்று திருமங்கலத்தினை அடுத்த டி.குன்னத்தூரில் நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான எஸ்ஐஆர் குறித்து நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தலைமை வகித்து பேசினார்.
எஸ்ஐஆர்யை அதிமுக ஆதரிப்பதாகவும், ஆனால் அதிலுள்ள சில குளறுபடிகளை சரி செய்யும்படி தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் மகேந்திரன், நீதிபதி, மாணிக்கம், தமிழரசன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், அவைத்தலைவர் முருகன், நகர செயலாள் விஜயன், ஜெ பேரவை செயலாளர் தமிழழகன், முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் லதா அதியமான், பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
