மதுரை, நவ. 7: உலக பக்கவாத தினத்தையொட்டி மதுரை அரசு மருத்துவமனையின் மூளை நரம்பியல் துறை சார்பில் விழிப்புணர்வு கருந்தரங்கு நடைபெற்றது. இதில் மருத்துவமனை டீன் டாக்டர் அருள் சுந்தரேஷ்குமார் தலைமை வகித்து பேசினார். நரம்பியல் சிகிச்சை துறைத்தலைவர் டாக்டர் முருகன் பேசுகையில், ‘‘பக்கவாத ேநாய் என்பது உலகிலேயே அதிகம் பேரை பாதிக்கும் இரண்டாவது நோயாக திகழ்கிறது.
பக்கவாதம் ஏற்பட்ட 4 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்டவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வந்துவிட்டால் அப்டிபிளேஸ் எனும் மருந்தை செலுத்தி மூளை தமணியிலுள்ள அடைப்பை கரைத்து விடலாம். இதன் வாயிலாக பாதிப்பை தடுக்கலாம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் குமாரவேல், நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் முரளிதரன் மற்றும் உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ேடார் கலந்து கொண்டனர். முன்னதாக முடக்குவாத விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் டாக்டர் சுப்பிரமணியன் செய்திருந்தார்.
