Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கைபேசி தொழில் நுட்பம் குறித்த பயிற்சிப் பட்டறை

மதுரை, ஆக. 7: மதுரை அமெரிக்கன் கல்லூரியின் இயற்பியல் துறை (சுயநிதிப்பிரிவு) மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து கைபேசி தொழில் நுட்பம் என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சிப் பட்டறையை நடத்தி வருகிறது. இதன் அறிமுகவிழாவில், முதுகலை சுயநிதிப்பிரிவு இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் கே.ஞானசேகர் வரவேற்றார்.

அமெரிக்கன் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் ஜெ.பால்ஜெயகர் பயற்சிப் பட்டறையை தொடங்கி வைத்து, இப்பயிற்சிப் பட்டறை மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன், தன்னம்பிக்கையும் ஏற்படும் என்றார். இதையடுத்து சிறப்பு விருந்தினரை, முன்னாள் இயற்பியல் துறை பேராசிரியர் மற்றும் மைக்கேல் பாரடே அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஸ்டீபன் ராஜ்குமார் இன்பநாதன் அறிமுகம் செய்து பேசினார்.

இந்த பயிற்சி பட்டறையின் துறை வல்லுநர் சன்செல் உரிமையாளர் விஜயக்குமார், பனிமனை பயிற்சியின் பாடத்திட்ட விவரங்களை வலியுறுத்தியதுடன், இப்பயிற்சி கிராமப்புறங்களை சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு பயனளிப்பதுடன், அவர்களின் மனவலிமையை அதிகரிக்கும் என்றார். இந்த பயிற்சிக்குத் தேவையான உபகரணங்கள், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற நிதி உதவியுடன் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை அமெரிக்கன் கல்லூரி நிதிக்காப்பாளரும், பயிற்சிப்பட்டறை ஒருங்கிணைப்பாளருமான முனைவர் எம்.பியூலா ரூபி கமலம் செய்திருந்தார்.