திருமங்கலம், நவ. 6: திருமங்கலத்தினை அடுத்த முத்தப்பன்பட்டியில் தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறன் மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருமங்கலத்தினை அடுத்த முத்தப்பன்பட்டிக்கு நேற்று வருகை தந்தார். அங்கு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறன் தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய எஸ்ஐஆர் வாக்காளர் படிவம் குறித்து, நிர்வாகிகளுக்கு பல்வேறு தகவல்களை எடுத்துரைத்தார். பின்னர் மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையாவின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த கூட்டத்தில் தெற்கு மாவட்ட, ஒன்றிய செயலாளர்கள், ராமமூர்த்தி, பாண்டியன், மதன்குமார், ஜெயசந்திரன், தங்கப்பாண்டி, தனசேகரன், ஜெயராமன், திருமங்கலம் நகர செயலாளர் ரம்யா முத்துக்குமார், நகர நிர்வாகிகள் செல்வம், கோல்டன் தங்கபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
