மதுரை, நவ. 6: இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்குஇ அதிகபட்ச தண்டனை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை மாநகர் மற்றும் புறநகர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், பெத்தானியாபுரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மாநகர் மாவட்ட தலைவர் லதா, மத்தியக்குழு உறுப்பினர் சசிகலா, மாநகர் மாவட்ட செயலாளரும், மாநகராட்சி கவுன்சிலருமான ஜென்னியம்மாள், புறநகர் மாவட்ட செயலாளர் சரஸ்வதி, மத்தியக்குழு உறுப்பினர் பொன்னுத்தாய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதில், கோவை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், காவல்துறை, மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் ஆள் நடமாட்டம் குறைந்த பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க போலீசார் நடவடிக்கை வேண்டும். காவல்துறை தங்களது ரோந்துப் பணியை வலுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
