மதுரை, டிச. 4: மதுரை, பவர்ஹவுஸ் சுப்பிரமணியபுரம் வளாகத்தில் மதுரை தெற்கு கோட்ட மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் நீண்ட காலமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக அலுவலகம் இன்று (டிச.4) முதல் மதுரை மீனாட்சியம்மன் கோவில் வாகன காப்பகம் அருகில் அமைந்துள்ள கோவில் துணை மின்நிலைய வளாகத்திற்கு மாற்றப்படுகிறது. இதனையடுத்து அலுவலக பணிகள் அனைத்தும் அங்கு மேற்கொள்ளப்படும் என மதுரை தெற்கு கோட்ட செயற்பொறியாளர் பாஸ்கரபாண்டி தெரிவித்தார். மேலும் மாதம் தோறும் நடைபெறும் மின் நுகர்வோர்கள் குறைதீர் முகாம், கோவில் துணை மின்நிலைய வளாகத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement

